Latestமலேசியா

மெட்ரிகுலேஷன் தேவையற்றதா? டாயிமிற்கு காலிட் கண்டனம்

கோலாலம்பூர், மே 15 – மேட்ரிகுலேஷன் கல்வி மலாய்க்காரர்கள்  பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்கு பின்பக்க வாசல் கதவு எனக் குறிப்பிட்ட டான்ஶ்ரீ டாயிம் ஸைனுடினின் கூற்று ஆதாரமற்றது என சாடப்பட்டுள்ளது.

அது அனுமானத்தில் கூறப்படுவதாக அம்னோவின் உதவித் தலைவர் காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டுக்கான ஆதாரத்தை டாயிம் காட்ட வேண்டுமென்றும் மலாய்க்கார மற்றும் இந்திய மாணவர்களும்  அறிவியல்,  மருத்துவ, பொறியியல், சட்டம் மற்றும் இதர  பாடங்களில் சீன மாணவர்களுடன்  சரி சமமான  தரத்தில் இருப்பதை டாயிம் நிரூபிக்க வேண்டும்.

வசதி குறைந்த மலாய் மாணவர்களுக்கு மெட்ரிகுலோஷன் கல்வி ஒரு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. அதில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி சிறப்பாக இருக்கிறது. அதன் பாடத் திட்டம் எச்எஸ்சியின் பாடத் திட்டத்திற்கும் கூடுதலானது.

நாட்டிலுள்ள புறநகர் பகுதிகளில் பங்சார், புக்கிட் துங்கு, தாமான் மலவாத்தி அல்லது துன் டாக்டர் இஸ்மாயில் போன்ற வளர்ச்சியடைந்த பகுதிகளில் இருக்கும் வசதிகளைப் பெற்றிருக்கவில்லை என்பதை டாயிம் மறக்க வேண்டாமென்றும் காலிட் கேட்டுக் கொண்டார்.

புறநகர் மாணவர்கள் வசதி குறைந்தவர்கள், நகர்புற மாணவர்களுடன் அவர்கள் போட்டிப்  போட முடியாதவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு கல்வியோடு புறப்பாட நடவடிக்கைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுவதையும் அவர் நினவுறுத்தினார். எனவே வெறும் அனுமானத்தை வைத்து டாயிம் மெட்ரிகுலேஷன் பற்றி அறிக்கை விட வேண்டாமென காலிட் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker