Latestமலேசியா

ரிம.1,800 வெள்ளி கையூட்டு : அதிகாரிக்கு 5 நாள் தடுப்பு காவல் !

சிரம்பான்,மே.15- ரிம.1,800 வெள்ளி கையூட்டு வாங்கிய குற்றத்திற்காக அரசாங்க இலாகாவைச் சேர்ந்த சுற்று சூழல் சுகாதார துணை அதிகாரி ஒருவர் 5 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

31 வயதுடைய அந்த நபர் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத காலக்கட்டத்தில் இரு தரப்பினரிடமிருந்து இந்த கையூட்டுகளைப் பெற்றதாக கூறப்படுகின்றது.  அத்தரப்பினர் மீது சுமத்தப்பட்ட சுற்று சூழல் சார்ந்த குற்ற வழக்கில் சாட்சியங்களை மறைப்பதற்கும் (கலவைகளின் அளவை குறைத்தல்), அபராதம் செலுத்த தவறிய அவர்களின் நீதிமன்ற வழக்கை தீர்த்து வைக்கவும் அவர் கையூட்டு வாங்கியுள்ளார் என ஊழல் தடுப்பு ஆணைய தரப்பு கூறுகின்றது.

இந்நிலையில் நெகிரி செம்பிலான் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழக்கறிஞர் முகமட் கைரி அப்துல் கரிம் செய்த தடுப்பு காவல் விண்ணப்பதின் அடிப்படையில் இன்று அவ்வழக்கு நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மஜிஸ்திரெட் நீதிபதி வி.வனிதா குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்திரவிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker