Latestமலேசியா

எல்லைக் காவல் பணியில் ஒருங்கிணைப்பு இல்லை! – வாங் கிளியான் விசாரணை

புத்ரா ஜெயா, மே 15 –  பெர்லிஸ் எல்லையோர காவல் கண்காணிப்பில் அமலாக்க அமைப்புகளிடம் ஒருமித்த ஒத்துழைப்பு இல்லையென வாங்  கிளியான் புதைகுழி சம்பந்தமான அரச விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் 32ஆவது சாட்சியான   எல்லையோர கண்காணிப்பு ஏஜென்சியின் (ஆக்கெம்) கமாண்டரான டிஎஸ்பி சைட் பஸ்ரி சைட் அலி அதனைத்  தெரிவித்தார்.

ஒவ்வொரு அமலாக்கத் தரப்பும் தனித் தனியாகச் செயல்படுவதாகவும் தங்களின் வரையறுக்கப்பட்ட நடைமுறையைக் கூட பின்பற்ற முடியாத நிலையும் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

தம்முடைய அமைப்பான ஆக்கெம்,  குறைந்த அளவிளான அதிகாரத்தை மட்டுமே பெற்றிருந்ததாகவும் 2 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ரோந்தினை நடத்தக் கூட அது மற்ற அமலாக்கத் தரப்பின் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் குறிப்பிட்டார். .ஆக்கெம் என்பது கடத்தலைத் தடுக்கும் பிரிவுக்குப் பதிலாக 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker