Latestமலேசியா

ஷா ஆலம் நகரின் புதிய மேயராக டத்தோ ஹரிஸ் கஸிம் தேர்வு !

ஷா ஆலம், மே.15- சிலாங்கூர் மாநில இஸ்லாமிய விவகாரப் பிரிவு இயக்குனராக பணியாற்றி வந்த டத்தோ ஹரிஸ் கஸிம்,  அம்மாநில தலைநகரான ஷா ஆலம் நகரின் புதிய மேயராக தேர்வு  செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இப்பதவியை வகித்து வந்த டத்தோ அகமட் ஸாஹாரினுக்கு பதிலாக இவர் நியமிக்கப்படவுள்ளார்.

சிலாங்கூர் மாநில செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மாநில தலைமைச் செயலாளர் டத்தோ அமின் அயா,  டத்தோ ஹரிஸ் கஸிமமிற்கு பதவி நியமன கடிதத்தை வழங்கினார்.  இவரின் மேயர் பதவிக் காலம் கடந்த மே 10ஆம் தேதி முதல் கணக்கிடப்படுகின்றது.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் புதிய இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள  கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் முன்னாள் செயலாளர் அடி பைஸலுக்கும் பதவி நியமன கடிதம் வழங்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker