Latestமலேசியா

அடிப்பில் பெயரில் சுய லாபம் தேடும் தீவிரவாத கும்பல் ! – வழக்கறிஞர் சாடல்

கோலாலம்பூர், மே.16-  அண்மையில் கைது செய்யப்பட்ட தீவிரவாத கும்பல் தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் பெயரை பயன்படுத்தி சுய லாபம் தேடிக் கொள்கிறது என அவரின் குடும்ப வழக்கறிஞர் கமாருஸமான் வஹாப்  குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் படு காயம் அடைந்த முகமட் அடிப், சிகிச்சை பயனளிக்காமல் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

அந்தச் சம்பவத்தில் அவர் சில தரப்பினரால் தாக்கப்பட்டரா அல்லது விபத்தில் சிக்கினரா என்பது இன்னமும் கேள்விக் குறியாகவே உள்ளது. இந்த மர்மத்தை களையவே மரண விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  தற்பொழுது இவ்விசாரணை ஷா ஆலம் நீதிமன்றத்தில் 35 நாட்களாக இன்று நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் அவரின் மரணத்திற்கு பலி வாங்குவதாக கூறி நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் முக்கிய பிரமுகர்களை கொலை செய்யவும் ‘ஐஎஸ்’ தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய  கும்பல் ஒன்று திட்டம் தீட்டி வந்துள்ளது. இது முற்றிலும் தவறான செயல்படாகும். அடிப்பின் மரணம் குறித்து யார் வேணுமனாலும் நியாயம் கேட்டு போராடலாம். ஆனால் போராடும் முறை நியாயத்திற்கும் சட்டத்திற்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு தீவிரவாதம் வழி கிடையாது.

பயங்கரவாதம் தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவித்து அடிப் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடுவதை அவரின் குடும்பத்தினர் ஒரு போது ஆதரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். மேலும் அந்த தீவிரவாத கும்பலின் செய்கை அடிப்பின் மரணத்திற்கு நியாயம் கேட்பதாக தெரியவில்லை. மாறாக இச்சூழ்நிலையையும் முகமட் அடிப்பின் பெயரையும் பயன்படுத்தி நாட்டில் சதி நாச வேலைகளை செய்து தங்களுக்கு சுய லாபம் தேடிக் கொள்வது போலவே உள்ளது.  எனவே எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுடன் எங்களை தொடர்பு படுத்த வேண்டாம் என்றும் கமாருஸமான்  கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker