Latestமலேசியா

அரசு ஊழியர்களுக்கு போனஸ்! தொகை பின்னர் அறிவிப்பு -மகாதீர்

ஜோர்ஜ் டவுன், மே 16 – இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்குப் போனஸ் வழங்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார்.

போனஸ் தொகை எவ்வளவு வழங்கப்படும் என்பதைக் குறிப்பிடாமல், அது பின்னர் அறிவிக்கப்படும் என அவர் சொன்னார். தேசிய நிலையில் ஆரிசியர் தினக் கொண்டாட்டத்தை பினாங்கு, பாயான் லெப்பாஸ் செத்தியா ஸ்பைஸ் அரங்கத்தில் தொடக்கி வைத்து உரையாற்றும்போது,  துன் மகாதீர் அதனைத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனமான கியூபெக்ஸ், நோன்புப் பெருநாளுக்கு முன்னர், அரசு ஊழியர்களுக்கும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும்  அரசு போனஸ் வழங்கும் என நம்பிக்கையைத்  தெரிவித்திருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker