Latestமலேசியா

ஆடம்பர கைப்பைகள் திருட்டு; இராணுவ ‘கேப்டன்’ கைது !

கோலாலம்பூர்,மே.16- இரு வாரங்களுக்கு முன் தலைநகர் ‘டைம்ஸ் குவேர்’ பேராங்காடியில் உள்ள கடையில் ஆடம்பர கைப்பைகளை திருடிய குற்றத்திற்காக “கேப்டன்’ அந்தஸ்து கொண்ட இராணுவ அதிகாரி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதியன்று தன் கடையில் உள்ள  விலையுயர்ந்த கைப்பைகள் சூறையாடப்பட்டுள்ளது என அக்கடை முதலாளி காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.

கடை அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிரா கானொளி பதிவின் வழி நாங்கள் அந்நபரை அடையாளம் கண்டு கொண்டு கொண்டோம். பின் அவரை கடந்த மே 9ஆம் தேதியன்று சுங்கை பீசி இராணுவ மையத்தில்  கைது செய்தோம் என டாங் வாங்கி மாவட்ட காவல்  படை தலைவர் ஏசிபி முகமட் பாமி விஸ்வநாதன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர், ஆன்-லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட இத்திருட்டினை மேற்கொண்டதாக தெரிகின்றது. ஏற்கெனவே கடந்த வருடம்  நடந்த ஒரு கடை திருட்டு சம்பவத்திலும் அந்நபர் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker