Latestமலேசியா

ஆலயத்தில் துப்பாக்கி வேட்டு – நால்வர் தேடப்படுகின்றனர்

கோல சிலாங்கூர், மே 16 – அண்மையில் தஞ்சோங் காராங் ஆலயம் ஒன்றில் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கி வேட்டுகளைக் கிளப்பிய நான்கு ஆடவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

அந்தத் துப்பாக்கி வேட்டுகள் இம்மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுங்கை பூரோங், பாரிட் 4இல் நடந்துள்ளதாக சிலாங்கூர் புலனாய்வு துறையின் மூத்த துணை ஆணையர் ஃபாட்சில் அஹ்மட் தெரிவித்தார்.

அந்த நால்வரும் பல முறை வானத்தை நோக்கிச்  சுட்ட வீடியோ பதிவு வைரலாகப் பரவி இருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த வீடியோ பதிவின்படி 15லிருந்து 20 வேட்டுகள் வரை விடப்பட்டன.

அந்த நால்வரும் மாறி மாறி வேட்டுகளைக் கிளப்பி இருப்பதாகவும் 30லிருந்து 67 வயதான அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஃபாட்சில் அஹ்மட் தெரிவித்தார்.

அந்தச் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்படவுள்ளதோடு அதனை 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம், பிரிவு 39இன் கீழ் விசாரணை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker