Latestமலேசியா

எம்.ஆர்.டி. நிலையங்களில் 58 வழிப்பறித் திருட்டுகள்!

ஷா ஆலம், மே.16 – இவ்வாண்டு ஜனவரி  முதல் மே மாதம் 15 வரை, சிலாங்கூரிலுள்ள 21 எம்ஆர்.டி இரயில் நிலையங்களில்  58 வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகப் பதிவாகியுள்ளன.

அதில் சுங்கை பூலோ மாவட்டத்தில் 11 சம்பவங்கள், பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் 15 சம்பவங்கள் மற்றும் காஜாங் மாவட்டத்தில் 19 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ நோர் அசாம் குறிப்பிட்டார்.

அவற்றுள்  செர்டாங் எம்ஆர்டி நிலையங்களில் 7 சம்பவங்கள், கோம்பாக் மாவட்டத்தில்  4 சம்பவங்கள், சுபாங் ஜெயாவில் 2 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது போன்ற, வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களைக் குறைக்கவும், எம்ஆர்டி இரயில் நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதாக,  நோர் அசாம் நேற்று சுங்கை பூலோவில் நடைபெற்ற  குற்றவியல் தடுப்பு ரோந்து நடவடிக்கையைத் தொடக்கி வைத்தபோது அவர் தெரிவித்தார்.

இச்சேவையைப் பற்றிய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கு, சுரியான் எம்ஆர்டி மற்றும் சுங்கை பூலோ எம்ஆர்டி நிலைய பயணிகளிடம் 400 கருத்துப் பரிமாற்ற பாரங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக  அவர்  தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker