Latestமலேசியா

ஒரு கணம் தாமதமானதால், 2 வயது சிறுமி பலி

உக்ரைன், மே. 16- தெற்கு உக்ரைனில் இருக்கும் கொசட்கே எனும் இடத்தில் 2 வயது சிறுமி தனது தந்தையின் காரில் ஏற்பட்ட தீயில் கருகி உயிரிழந்தாள்.

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தத் துயரச் சம்பவத்தில் ஒர்யானா என்ற அந்தச் சிறுமி,  வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது தந்தையின் காரினுள்  ஏறியதாக நம்பப்படுகிறது.

அந்தக் காரினுள் தீப் பெட்டியைக் கண்ட  அச்சிறுமி, அதனை எடுத்து தவறுதலாகத்  கொளுத்தியதால் அந்தக் கார் தீப்பற்றிக் கொண்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த  சிறுமியை வெகு நேரமாகப் பார்க்காததால் அந்தச் சிறுமியின் தந்தை வெளியே வந்து பார்த்தபோது,  அவரின் கார் தீப்பற்றி எரிவதைப் கண்டு அதிர்ந்துள்ளார் என மிரர் ஒன்லாய்ன் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

27 வயதான ஒர்யானாவின் தந்தை தமது மகளைக்  காப்பற்ற முயன்றுள்ளார், இருப்பினும் அது பலனளிக்காமல் போனதாக அந்த  செய்தித் தளம் மேலும் தெரிவித்தது.

இதனை அடுத்து, அண்டை வீட்டார் அதனை போலீசாருக்குத் தெரிவித்தனர்.  மேலும், சம்பவ இடத்தில் தீப்பெட்டி மற்றும் தீக் குச்சிகளைக் கண்டதாக உக்ரைன் ஆபத்து, அவசரச் சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker