Latestமலேசியா

கப்பல் கட்டும் தள ஊழியர் மாயம் – கடலில் மூழ்கி இருக்கலாம்

சிபு, மே 16 –  சிபுவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் வேலை செய்து வந்த இந்தோனேசிய ஆடவர் புதன்கிழமை காணாமல் போயிருப்பதால் அவர் கடலில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தகவல் கிடைத்தவுடன் அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு  அது இன்னும் தொடர்வதாக துணை ஆணையர் ஸ்டேன்லி ஜொனாதன் ரிங்கிட் தெரிவித்தார்.

காணாமல் போனவர்  32 வயதான இந்தோனேசியா, ஜாவா தீமோர், பில்தார் எனுமிடத்தைச் சேர்ந்த ஆகுஸ் தானி என அடையாளம் கூறப்பட்டது. அவர் கடைசியாக ஒரு கப்பலின் மேல் தளத்தில் வேலை செய்து வந்ததாக ஆகக் கடைசியான தகவல் தெரிவிக்கிறது.

விசாரணையில், அதில் சூது ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவதாகவும் அதனைக் காணாமல் போன நபர் என வகை படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்டேன்லி தெரிவித்தார்.

இதனிடையே, கப்பல் கட்டும் தளங்களில்  வேலையிட விபத்துகளின் காரணமாக இறப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அம்மாதிரியான சம்பவங்கள்  9இல் 4 சிபுவில் நடந்துள்ளதுள்ளன. அதில் 3 மரணங்கள் ஏற்பட்டிருப்பதாகவும்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker