Latestஇந்தியா

கமல்ஹாசனுக்கு எதிராக காலணி வீசியவர்கள் கைது!

மதுரை, மே. 16- திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நோக்கி காலணி வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தபோது தீவிரவாதம் குறித்து பேசினார்.

அதில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனவும் அவர் தேசத்தந்தை காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே என கூறியிருந்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரதமர் மோடி துவங்கி சினிமா பிரபலங்கள் பலரும் அவருடைய கருத்துக்கு ஆதரவாகவும்- எதிராகவும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதனால் இரண்டு நாட்களாக கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடாமல் இருந்தார். அவருடைய வீட்டுக்கும் போலீசார் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர். இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த கமலஹாசன், தான் பேசியது குறித்து விளக்கம் கொடுத்தார்.

அப்போது பாஜக கட்சியைச் சேர்ந்த சில இளைஞர்கள் திடீரென கமல்ஹாசனை நோக்கி காலணிகளை வீசி எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker