Latestமலேசியா

கரும்பு அரைக்கும் இயந்திரத்தில் 4 விரல்களை இழந்த வியாபாரி!

கோத்தா பாரு, மே.16- கம்போங் டேவான் பேத்தாவில் உள்ள நபரின்  4 விரல்கள் கரும்பு அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிச்  சிதைந்தன.  நேற்று மாலை 6 மணியளவில் ஒஸ்மான் யா (வயது 50) என்பவர் ரமலான் மாதத்தில் கரும்புத் தண்ணீர் விற்பதற்காக இயந்திரத்தில் கரும்பை அரைக்கும்போது தனது கையை அந்த இயந்திரதினுள் தவறுதலாக விட்டதில் அவரின் 4 விரல்களும் சிதைந்தன.

5 பிள்ளைகளுக்குத் தந்தையான ஒஸ்மான்,  அந்தக் கரும்பு இயந்திரத்தின் மின் இனைப்பை நிறுத்தாமல் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது,  இத்துயரச் சம்பவம் நேர்ந்ததாகத் தெரிவித்தார்.  சம்பவம் நிகழ்ந்த பின்னர்,  அவர் உடனடியாக மின் இனைப்பை நிறுத்தி விட்டு தனது மகன்களை அழைத்து இயந்திரத்தில் சிக்கிக்  கொண்டிருந்த விரல்களை விடுவிக்கக் கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து, அவர் கோத்தா பாரு ராஜா பெரம்புவான் ஜைனாப் II மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட உள்ளங்கையை மருத்துவர்கள் சரி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker