Latestமலேசியா

காணாமல் போன தாதியார் பிணமாக கிடந்த மர்மம்!

செர்டாங்,மே.16- செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதியார் சித்தி கரினா பிந்தி முகமட் கமருடீன் சைபர் ஜெயவில் உள்ள வீடொன்றில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 8ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் செர்டாங் மருத்துவமனை அருகே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் ‘ஹொண்டா’ ரக கார் ஒன்றில் அவரை இறுதியாக கண்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் அவரை எங்கும்  காணவில்லை.

மறுநாள் இரவு 9 மணி வேலைக்கு சித்தி கரினா வராததை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளது, ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை என்பதால் மே 10ஆம் தேதியன்று  எங்களை தொடர்பு கொண்டு தகவல் வழங்கினர் என அவரின் தங்கை சித்தி கைராணி தெரிவித்தார்.

இறுதியாக தன் கணவரை தொடர்பு கொண்ட அவர், நோன்பு பெருநாளை முன்னிட்டு சாயம் பூசுவதற்கு இல்லம் திரும்புவதாக தெரிவித்துள்ளார். அதுவே  சித்தி கரினா தன் குடும்பத்தினருடன் பேசிய கடைசி வார்த்தைகளாகும்.

இந்நிலையில் அவர் சைபர் ஜெயாவில் வீடு ஒன்றில் இறந்து கிடந்தது குடும்பத்தினர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்றும் சித்தி கைராணி  குறிப்பிட்டார்.
40 வயதுடைய சித்தி கரினாவிற்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் இருவர் இரட்டையர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker