Latestஇந்தியா

காதலனை கடத்திய டென்னிஸ் வீராங்கனை! விமான நிலையத்தில் கைது!

சென்னை, மே. 16- சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் வாசவி. இவர் டென்னிஸ் வீராங்கனையாவார். இவரும் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நவீத் அகமதும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் நவீத்தை கடத்தியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து வாட்ச் , ஐபோன் முதலியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் நவீத்தின் காதலியே அவரை ஆள் வைத்து கடத்தியது  தெரியவந்தது.

இந்நிலையில் வாசவியிடம் போலீசார் விசாரித்தபோது தன்னோடு காதலன் நெருக்கமான புகைப்படங்களை காட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக தன்னை மிரட்டியதால் இந்த புகைப்படங்களை அழிக்கவே நவீத்தை கடத்த முயற்சி மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

நவித் கடத்தலுக்குப் பின்னர் அமெரிக்காவுக்கு தப்பித்துச் செல்ல முயன்ற வாசவி விமானநிலையத்தில்  போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker