Latestமலேசியா

காயமடைந்தச் சிறுவன்; இலவசமாக மருத்துவமனைக்குக் கொண்டுச் சேர்த்தக் கிராப் ஓட்டுனர்

சிங்கப்பூர், மே. 16- மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இலவசமாக சேவைப் புரிந்த கிராப் ஓட்டுனரின் செயலை மாது ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பள்ளியில் காயமடைந்த தனது மகனைக் காணச் சென்ற அந்த மாது சம்பந்தப்பட்ட கிராப் காரைப் பதிவு செய்துள்ளார். காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவர்கள் இருவரின் உரையாடளின் வழி கிராப் ஓட்டுனருக்கு அந்த மாது காயமடைந்த மகனைப் பள்ளியிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போகும் தகவல் தெரியவந்துள்ளது.

இதனிடையே, அந்த கிராப் ஓட்டுனர் அந்த மாதுவை பள்ளியிலேயே இறக்கிவிடாமல், அந்த மாதுவையும் அவரின் மகனையும் மருத்துவமனைக்கு இலவசமாக தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையில், இந்தப் பகிர்வைப் பார்த்த பலர் அதைப் பகிர்ந்து, கிரப் ஓட்டுனரைப் பாரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker