Latestமலேசியா

காவல்துறை தேடி வந்த மூன்று தீவிரவாதிகள் கைது !

கோலாலம்பூர்,மே.16- காவல் துறையால் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச மலேசிய காவல் படை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமீட் படோர் தெரிவித்தார்.

நோன்பு மாதத்தில் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த திவிரவாத கும்பலைச் சேர்ந்த நால்வரை காவல் துறை அண்மையில் கைது செய்தனர். கடந்த நவம்பர் மாதம் சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் மரணமடைந்த முகமட் அடிப்பிற்காக பழி வாங்குவதாக கோரி நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் முக்கிய பிரமுகர்களை கொலை செய்யவும் ‘ஐஎஸ்’ திவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அந்த கும்பல் எண்ணம் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த மே 5ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் காவல் துறையைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு (ஈ8)  அவர்களை திரெங்கானு , கிள்ளான் பள்ளதாக்கு பகுதிகளில் கைது செய்தது. மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கியும் வெடிகுண்டு கருவிகளையும் கைப்பற்றியது. இக்கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூவரை காவல் துறை தேடி வந்தது.

பீடோங் கெடாவைச் சேர்ந்த மலேசியர்களான ஷாசானி மஹ்சான் , முகமட் நூருள் அமின் அஸிஸான் , இறுதியாக பந்திங்கில் வசித்து வந்த பாதிர் திர் எனும் இந்தோனேசிய பிரஜை ஆகியோரருக்கு காவல் துறை வலை வீசியது. இந்நிலையில் அவர்கள் மூவரையும் நேற்று முன் தினம் கெடா, சிலாங்கூர் மாநிலத்தில் கைது செய்ததை டத்தோஶ்ரீ அப்துல் ஹமீட் படோர் இன்று உறுதிப்படுத்தினார்.

கெடா, கோல மூடாவில் கைது செய்யப்பட்ட இரு மலேசியர்களும்  கடந்த வருடம் ஜொக்ஜக்கர்தாவில் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி பெற்றுள்ளனர்.  இந்தோனேசியவைச் தீவிரவாத அமைப்பு ஒன்று அவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது. அவர்களுடன் இப்பயிற்சி பெற்ற மற்றொரு தீவிரவாதியை கடந்த நவம்பர் மாதம் கைது செய்துள்ளோம்.

இவ்விருவரும் அங்கு இரசாயனங்களைக் கொண்டு பெரும் விளைவை ஏற்படுத்தும் வெடிமருந்துகளை தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்றுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker