Latestமலேசியா

கெடா அரசு ஊழியர்களுக்கு ரிம 1,000 நோன்பு பெருநாள் சிறப்பு நிதி !

அலோர் ஸ்டார்,மே.16- நோன்பு பெருநாளை முன்னிட்டு கெடா மாநில அரசு அதன் ஊழியர்களுக்கு  ரிம.1,000 சிறப்பு உதவி நிதி வழங்கவுள்ளது.

மநில அரசாங்கத்தில் பணிபுரியும் 4,711 ஊழியர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படவுள்ளது. அவர்களில் 316 இடைக்கால, ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களும் அடங்குவர். வரும் மே 30ஆம் தேதியன்று இந்த சிறப்பு உதவித் தொகை அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது என கெடா மந்திரி பெசார் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வரும் ஜூன் 5,6ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ள நோன்பு பெருநாளுக்குத் தயாராகும் வகையில் அரசு ஊழியர்களுக்கு இந்த ரிம.1,000 உதவி தொகை வழங்கப்படவுள்ளது. நேற்று விஸ்மா டாருல் ஆமான் அலுவலகத்தில் நடைபெற்ற மாநில அரசின் வாராந்திர கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker