Latestமலேசியா

சாலையில் கண்டெடுத்த பணப்பை -உரிமையாளரிடம் ஒப்படைத்த ராஜு

புத்ராஜெயா, மே 16 – சில தினங்களுக்கு ரோபெட்டோ கால்லேஜா என்பவர் காணாமல் போன தம்முடைய பணப்பயை அதே நாளில்,  சாலைத் துப்புரவு ஊழியர் கண்டெடுத்து ஒப்படைத்தாக முகநூலில்   பதிவேற்றம் செய்துள்ளார்.

காணாமல் போன தம்முடைய பணப்பை குறித்துப் புகார் கொடுத்த்தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பின்னர் அவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்ததை அடுத்து அவர் அந்த தொலைபேசி உரையாடலில் தொலைத்த தம்முடைய பணப் பையை சாலையோரத்தில் கண்டு பிடித்தகாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த நபரைக் காண சென்றபோது அந்நபர் திரு ராஜு என தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டதாக ரோபெட்டோ  தெரிவித்தார். ராஜுவிடமிருந்து, பணப்பைத் திரும்பப் பெற்ற ரோபெட்டோ பணப்பையினுள் இருந்த பணம், வங்கி அட்டை மற்றும் மற்ற ஆவணங்கள் அனைத்தும் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், பணப்பையை திரும்ப உரிமையாளரிடமே ஒப்படைத்தால், ரோபெட்டோ  நன்றி கூறும் வகையில் சன்மானம் கொடுத்த போது,  அதை ராஜு வேண்டாம் என மறுத்துள்ளார்.  இதிலிருந்து ராஜூவின் நேர்மை மற்றும் மனிதாபமான குணத்தைக் கண்டு அவர் மெய்சிலிர்த்துப் போனாதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ரோபெட்டோ  தம்முடைய கவனக் குறைவால் காரின் மேல் தம்முடைய பணப்பையை மறந்து வைத்து விட்டு வாகனத்தைச் செலுத்தியதில் அவருடைய பணப்பையை தொலைக்க நேர்ந்தது என்றும் அதை புத்ராஜெயாவில் சாலை சுத்தம் செய்யும் பணியிலிருந்த ராஜு கண்டெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

ராஜு ஆலாம் ஃபுலோராவில் பணியாற்றி வருகிறார் எனவும் அவரின் இந்த செயலைக் கண்டு ரோபெட்டோ  பூரித்துப் போனதால் ஆலாம் ஃபுலோராவிலிருந்து அவருக்கு சில சலுகைகளை வழங்கி அதனை ஆலாம் ஃப்லொராவில் முகநூலின் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ராஜு மற்றும் அவரின் நண்பர்களுடன் ரோபெட்டோ காலை உணவுக்கு அழைந்திருப்பதாகவும்  குறிப்பிட்டிருந்தார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker