Latestமலேசியா

பணிப்பெண் மரணம்: முதலாளியை விடுவிப்பதா? சர்ச்சை மூண்டது!

கோலாலம்பூர், மே 16 –  பினாங்கில் இந்தோனேசிய பணிப்பெண் மரணமடைந்த வழக்கில் அதற்குக் காரணமான முதலாளி விடுவிக்கப்பட்டது பலரின் விமர்சனத்துக்கு ஆளானது.

எனவே, அம்மாதிரியான கிரிமினல் வழக்குகள்  சம்பந்தமான சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

சில முக்கிய வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்குகளை மீட்டுக் கொள்வது கவலையை அளிப்பதாகவும், அது நீதியின் மாண்பைக் காப்பதில் தவறி வருவதாகப் பொருள்படும் என வழக்கறிஞர் மன்றத் தலைவர் அப்துல் ஃபாரீட் அப்துல் கஃபூர் தெரிவித்தார்.

இந்தோனேசிய பணிப்பெண்ணான அடெலினா சவோ உடல் உள்ளுறுப்புகள் சில செயல்படாது போனதால் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மருத்துவமனையில் மரண மடைந்தார்.

அவர் வீட்டு உரிமையாளரால் கொடுமைப் படுத்தப்பட்டு, உணவு வழங்காமல், வீட்டுக்கு வெளியே, நாய் கொட்டிலுக்கு அருகில் படுத்துறங்கியது பொதுமக்களின் பெரும் கண்டனத்துக்கு இலக்கானது.

அதில் சம்பந்தப்பட்டிருந்த அம்பிகா என்ற மாது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அரசு வழக்கறிஞர் அந்த வழக்கை தொடர விரும்பாமல் மீட்டுக் கொண்டார்.

இது போன்ற சட்ட நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டுமென அப்துல் ஃபாரீட் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker