Latestமலேசியா

பண்டார் மலேசியா, இசிஆர்எல் திட்டங்கள்; வளர்ச்சிக்கு வித்திடும்! – அஸ்மின் அலி

கோலாலம்பூர், மே 16 – பண்டார் மலேசியா, இசிஆர் எல் திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படவிருப்பதால் அந்நிய முதலீடு பெற வாய்ப்பிருப்பதாகப் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

உலக பொருளாரத்தில் சரிவு, அமெரிக்க -சீன வர்த்தக மோதல்கள், எண்ணெய் விலை சரிவு போன்றவை நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

எனவே உள்நாட்டு பயனீட்டை அதிகரித்து, தனியார் துறை முதலீட்டைப் பெருக்கும் நோக்கில் பண்டார் மலேசியா மற்றும் கிழக்குக்கரை ரயில் திட்டங்கள் மீண்டும் தொடர முடிவெடுக்கப்பட்டது.

சீனாவின் பெல்ட் எண்ட் ரோட்  திட்டத்தின் மூலம் மலேசியா பலனடையும். வட்டார நாடுகளின் மக்கள் தொகையான 65 கோடி, வாங்கும் சக்தி அதிகரிப்பானது மலேசியாவுக்கு நன்மையையே கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 3,700 மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்த 5,470 கோடி ரிங்கிட் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும்  அஸ்மின் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker