Latestமலேசியா

பத்துமலை உட்பட 3 கோயில்களுக்கு ஐஎஸ் மிரட்டல்! பாதுகாப்பு தீவிரம்!

பெட்டாலிங் ஜெயா, மே 16 –  அண்மையில் ஐஎஸ் தீவிரவாதிகள் நால்வர் கைது நடவடிக்கைக்குப் பின்னர், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் 3 இந்து ஆலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பத்துமலை ஶ்ரீசுப்ரமணியர் ஆலயம், ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் அமைந்துள்ள  ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் ஜாலான் புடுவில் உள்ள கோர்ட்டு மலை கணேசர் ஆலயம் ஆகியவைகளே அவையாகும்.

மேற்கண்ட இந்த மூன்று ஆலயங்களை நிர்வகித்து வரும் ஶ்ரீமகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், ஐஎஸ் தீவிரவாதிகளின் கைது நடவடிக்கையின் மூலம் இதனைத் தெரிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களைத் தகர்க்க  அவர்கள் திட்டமிட்டுள்ளதையும் அதற்காகக் கூறப்படும் அவர்களின் காரணத்தையும் நிர்வாகம் கடுமையாகக் கருதுகிறது. மேலும், சீபீல்டு ஆலய கலவரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் அடிப்பின் மரணத்திற்கு பழி வாங்க நினைப்பது கவலையை அளிப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

தற்போது அந்த ஆலயங்களில் தலா மூன்று காவலர்கள் பாடுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அது மேலும் பலப்படுத்தப்படும்.  அதோடு, ஆலயங்களுக்கு வரும் பக்தர்களின் கைப்பைகள் சோதனை இடப்படும்.

மேலும், மேற்கண்ட ஆலயங்களின்   பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பத்துமலை ஆலயத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 3,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker