Latestமலேசியா

பன்றி மோதியதால் விபத்து: தபால்காரர் உயிரிழந்த துயரம்!

கோல சிலாங்கூர், மே 16 – தபால்காரரின் வேலை தபால்களை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். அப்படி தமது வேலையைத் தொடங்கிய ஒரு தபால்காரர் கிள்ளான், மேரு – தெலுக் இந்தான் சாலையின்  27ஆவது கிலோ மீட்டரில், பன்றி மோதிய விபத்தில் துரஷ்திடவசமாக உயிரிழந்தார்.

இன்று காலை 8.40 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 19 வயதுடைய முகமட் அஃபிக் முஸ்லி தலையிலும் உடலிலும் கடுமையான காயங்களுக்கு இலாக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  முகமட் அஃப்பிக் முஸ்லி தமது வீட்டிலிருந்து மேருவில் உள்ள தனது வேலை இடத்திற்கு மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்தார்.

102ஆவது கிலோ மீட்டரில், திடீரென பன்றி ஒன்று சாலையைக் கடந்து செல்லும்போது, முகமட் அஃப்பிக்கை  மோதியதால், அவர்  அருகிலுள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்டு மரணமடைந்ததாக  கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அஸ்ரி வாஹாப்  தெரிவித்தார்.

மேலும், கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட  முகமட் அஃப்பிக்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தாங்சோங் காராங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக முகமட் அஸ்ரி தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1) இன் கீழ் விசாரணை நடத்தப்படும் என முகமட் அஸ்ரி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker