Latestமலேசியா

பள்ளிவாசலில் அரசியலா? தவறான செயலாகும்! – ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு, மே 16 –  பள்ளிவாசலில் அரசியல் பேசியது விதிமுறையை மீறிய செயல் என ஜோகூர் சுல்தான் கடிந்து கொண்டுள்ளார்.மே 10ஆம் தேதி லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹோக் லியோங், தெனாங் ஸ்டேஷன் பள்ளிவாசலில் அரசியல் உரை நிகழ்த்தியது தவறு, சமய நெறி முறையை மீறிய செயல் என்றும் ஜோகூர் சுல்தான், சுல்தான் இஸ்கண்டார் சாடியுள்ளார்.

பள்ளிவாசல்களில் அரசியல் பேசக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அது சுற்றறிக்கையின் மூலமும் தெரிவிக்கப்பட்டது.  பல நூற்றாண்டு காலம் மாநிலத்தில் கடைபிடித்து வரும் வழக்கத்துக்கு எதிர்மறையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலானது அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதோடு, ஜோகூர் மாநில முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தி உள்ளதாக சுல்தான் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker