Latestமலேசியா

பிரதமருக்கு சிகை அலங்காரம் செய்யும் மோகன் முத்துப்பண்டிதன்

கோலாலம்பூர்,மே.16 – ஒருவரை பார்த்தவுடன் நம்மைக் கவரும் முதல் அங்கமாக இருப்பது அவரின் வெளித்தோற்றம். அவற்றுள் அவர்களின் உடை, முக ஒப்பனை முக்கிய பங்கு வகித்தாலும் அவர்களின் சிகை அலங்காரமும் கூடுதல் மெருகூட்டுவதை யாரும் மறுக்க முடியாது.

நம் நாட்டில் ஆண்களுக்கான சிகை அலங்கார தொழிலில் நம் இந்தியர்கள் அதிகமாகவே, ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மோகன் முத்துப்பண்டிதன். இவருடைய சிறப்பு நாட்டின் 2 பிரதமர்களுக்கு சிகை அலங்காரம் செய்திருப்பது. உலகின் மிக வயதான பிரதமர் துன் டாக்டர் மகாதீரை இளமையாக காட்டுவதில் இவரின் பங்களிப்பும் ஓரளவுக்கு உள்ளது என்று சொல்லலாம்.

கடந்த 24 ஆண்டுகளாக Royal Lake Club எனும் இடத்தில் முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு வரும் இவர் துன் டாக்டர் மகாதீருக்கு முடி திருத்தும் அனுபவத்தை இவ்வாறு வணக்கம் மலேசியாவோடு பகிர்ந்து கொள்கிறார்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker