Latestஇந்தியா

புகுந்த வீட்டுக் கொடுமை: நிர்வாணமாக ஓடிய இளம் பெண்: வீடியோ எடுத்த குரூரம்!!

சூரூ,மே.16- ராஜஸ்தானில் சூரூ என்ற இடத்தில், ஓர் இளம்பெண் புகுந்த வீட்டு கொடுமையினால் நிர்வாணமாக வீதியில் இறங்கி ஓடிய போது செல்போனில் படம் எடுத்து பிடித்து அதனை வைரலாகி வருகின்றனர் அப்பகுதி கொடூரர்களில் சிலர்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வரதட்சணை கொடுமை ஒரு பக்கம் இருக்க, புகுந்த வீட்டினர் கொடுமை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

அப்படி தான் இச்சம்பவம் நடத்துள்ளது. சூரூ வட்டாரத்தில் இளம் பெண் நிர்வாண சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பெண் திடீரென வீதியில் அழுது கொண்டே நிர்வாணமாக நடந்து வந்தார். அதைப் பார்த்த பலரும் அந்த பெண்ணின் உடலை மூட எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக செல்போனில் படம் பிடித்தனர்.

அப்பெண் எதனையும் பொருட்படுத்தாமல் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.தனது மாமியார் ,கொழுந்தியாள் மற்றும் கொழுந்தன் அனைவரும் சேர்ந்து தன்னை நிர்வாணப் படுத்தி சரமாரியாக அடித்து உதைத்தாக புகார் கூறினார். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்ததாகவும் புகார் அளித்துள்ளார் .

தனது கணவனர் அஸ்ஸாம் மாநிலத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்வதாகவும்- மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தன்னை திருமணம் செய்து, அழைத்து வந்து சித்திரவதை செய்கிறார்கள் எனவும் அந்த புகாரில் அப்பெண் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாமியார் கொழுந்தனார் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker