Latestமலேசியா

பெர்மிட் இல்லாமல் வேலை செய்த மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது

சிங்கப்பூர், மே 16 –  சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் புட்பாண்டா, டெலிவெரூ ஆகிய உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில்  அனுமதியின்றி வேலை செய்த இரு மலேசியர்கள் அந்நாட்டு அமலாக்கத் தரப்பினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 25ஆம் தேதி 24 வயதான  மலேசிய சுற்றுலாப்  பயணி  வேலை பெர்மிட் இல்லாமல்  வேறொருவரின் வேலை பர்மிட்டைப் பயன்படுத்தி உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரின் நண்பர் அந்த அனுமதியைக் கொடுத்ததன் மூலம் ஒரு கணிசமான வருமானத்தைப் பெற்றுள்ளார் என தெரிய வருகிறது.

வேறோரு சம்பவத்தில், ஏப்ரல் 30 மற்றும் மே 7 ஆகிய நாட்களில் மலாக்கா ஸ்திரீட், நோவினா, தேங்லின் மாலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 21 வயதான மலேசிய சுற்றுலாப் பயணி ஒருவர் அதே போன்று, வேலை பெர்மிட் இன்றி உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

ஒருவருடைய வேலை பெர்மிட்டை மற்றொருவருக்கு இரவல் கொடுப்பதன் மூலம் சிலர் நாளொன்றுக்கு 300 சிங்கப்பூர் டாலர் வரை சம்பாதிக்கின்றனர்.

இம்மாதிரியான இரவல் கொடுக்கும் சட்டவிரோதக் காரியங்கள் ஓர்சர்ட் சாலை, சைனா டவுன், சென்ரல் பிஸினஸ் மாவட்டம் போன்ற இடங்களில் நடைபெறுகின்றன.

2016 லிருந்து 2018 ஆம் ஆண்டு வரை அம்மாதிரியான சம்பவங்கள் 900 புகார் செய்யப்பட்டுள்ளன. மேலும் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்மாதிரியான சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவோருக்கு 5,000 சி.டாலரிலிருந்து ( ரிங். 15,241)  30,000 சி.டாலர் (ரிம. 91,447)  வரை அபராதம் விதிக்கப்படும்.

சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்புவோர், அதற்கான முறையான வேலை பெர்மிட்டை வைத்திருப்பது கட்டாயமாகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker