Latestமலேசியா

மலேசியாவில் 107 ஆண்களுக்கு 100 பெண்கள்!

புத்ராஜெயா, மே. 16- இவ்வாண்டின் முதல் மூன்று மாத காலத்தில் மலேசிய மக்கள் மக்கள் தொகையில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளி விவரத் துறை தெரிவித்திருக்கிறது

அதேவேளையில் ஒட்டுமொத்த மலேசிய மக்கள் தொகை முற்பத்தி 32.66 மில்லியன் என அறிவித்திருக்கும் நிலையில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறது என்ற விவரத்தையும் அது வெளியிட்டிருக்கிறது.

புள்ளி விவரம் துறையின் அறிவிப்புப் படி மலேசிய மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 16.86 மில்லியன் ஆகும். பெண்களின் எண்ணிக்கை 15.8 மில்லியன் ஆகும். அதாவது 107 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற விகிதாச்சாரத்தில் இது அமைந்திருக்கிறது என்று புள்ளி விவரத் துறை தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகம்மட் உஷிர் மஹுடி தெரிவித்தார்.

இந்த மக்கள் தொகையில் 29.31 a மில்லியன் மக்கள் மலேசிய பிரஜைகள். எஞ்சிய 3.35 மில்லியன் பிரஜை அல்லாதவர்கள். சிலாங்கூர் மாநிலம் தான் மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கிறது. அதாவது 6.54 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு இருக்கிறது. மிகக் குறைந்த மக்கள் தொகை புத்ராஜெயாவில் தான் உள்ளது. அங்கு 92 ஆயிரத்து 640 பேர் உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker