Latestமலேசியா

மோசடிக் கும்பலிடம் ஒரே நாளில் ரிம. 132,000 இழந்தார் ஆசிரியை!

குவாந்தான், மே 16 –  இணைய மோசடியின் மூலம் ஆசிரியை ஒருவர் ஒரே நாளில் 1,32,000  ரிங்கிட்டை இழந்துள்ளார். தாம் போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருப்பதாக மலாக்காவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற பெண் அதிகாரி கூறியதோடு, அது சம்பந்தமாக  இன்ஸ்பெக்டர்  முகமட் யூசோப்பிடம் பேசும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார்.

அதன்படி,  அந்த 60 வயது ஆசிரியை,  இன்ஸ்பெக்டர் என்பவரிடம் பேசியபோது, அவர் போதைப் பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நம்பப் படுவதாகவும் பண 1,32,000 ரிங்கிட்டை அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் அந்தக் குற்றச்சாட்டுகள்  மூடி மறைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியை, அந்தப் பணத்தை வங்கியில் செலுத்திய பின்னர், அந்த இன்ஸ்பெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அந்த ஆசிரியை  தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட ஆசிரியை, போலீசில் புகார் செய்துள்ளதாக பகாங் வர்த்தகக் குற்றப் புலனாய்வு இலாகா தலைவர் முகமட் வாஸிர் முகமட் யூசோப் தெரிவித்தார். இந்தக் வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420இன் கீழ் விசாரிக்கப்படும் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு சிறை, பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker