Latestமலேசியா

‘வணக்கம் மலேசியா’வின் மனம் கனிந்த நன்றி

மலேசியாவின் பிரபலமான முன்னோடி தமிழ் இணைய செய்தி தளமாக விளங்கி வரும் ‘வணக்கம் மலேசியா’ தொடங்கப்பட்டு, இன்றோடு 16 ஆண்டுகளை நிறைவு செய்து,  17ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

இந்த நீண்ட நெடிய பயணத்தில் ‘வணக்கம் மலேசியா’ இந்திய சமூகத்துக்கும் நாட்டுக்கும், ஆற்றிவரும் சேவை அளப்பரியது.
உள்நாட்டு, அயல்நாட்டுச் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு பயனர்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்  தொடர்ந்து வாரிக் குவித்து வருகிறது.

இது வணக்கம் மலேசியாவின் பெருமைக்குரிய தருணம். இந்த தருணத்தில் வெகுவாக நினைந்து பார்த்து நன்றி கூரத்தக்க வணக்கம் மலேசியாவின் பயனர்களே.

செய்தித் துறையில் சிறந்து விளங்குவதற்கு அகப்பக்க பயணர்களே முழு முதற் காரணம் என்பதை மீண்டுமொரு முறை போற்றுகிறது வணக்கம் மலேசியா.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுகளின் அரசியல், பொருளாதார, வர்த்தக,  சமூக, கலை, கலாசாரம்,  சினிமா மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் தாங்கி வருவதோடு சொந்த வீடியோ  பதிவு செய்திகளையும் வழங்கி வாசகர்களை கவர்ந்து வருகிறது.

இந்தச் சேவையானது வரும் காலங்களில் தொடர்வதோடு செய்திகளில் மெருகூட்டும் வகையில் நவீன கலை நுணுக்கங்களும் சேர்க்கப்படும் என 17 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த பொன்னான தருணத்தில் இந்த உறுதி நவில்கிறோம்.

கடந்து வந்த  பதினாறு ஆண்டுகளில் எங்களுக்கு வற்றாத ஆதரவை வழங்கி, பாராட்டி ஊக்குவித்து, அவ்வப்போது கருத்துகளையும் ஆலோசனைகளையும்  வழங்கி உதவி வரும் அனைத்துத் தரப்பினருக்கும் ‘வணக்கம் மலேசியா’ தனது மனங்கனிந்த நன்றியை முன்வைக்கிறது.
.
“தகவல் அறிந்த சமூகத்தை உருவாக்குவதே எங்களின் குறிக்கோளாகும்” ………………….. நன்றி, வணக்கம்!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker