Latestசினிமா

விபத்தில் சிக்கிய நடிகை வினோதினி கணவர் கவலைக்கிடம்!

சென்னை, மே. 16- பிரபல நடிகை வினோதினியின் கணவர் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 80 மற்றும் 90களில் தமிழ்,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி. பேபி லட்சுமி என்கிற பெயரில் மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஆத்தா உன் கோயிலிலே, வண்ண வண்ண பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

மேலும் பட வாய்ப்பு குறைந்ததால் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த வகையில் அவர் நடித்த சித்தி, அகல் விளக்குகள், சக்தி போன்ற பல தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்த வினோதினி திருமணத்திற்குப் பின் திரையுலகை விட்டு விலகினார்.

இந்நிலையில் இவருடைய கணவர் ஸ்ரீதர் நேற்று திருவான்மியூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அப்போது எதிரே வந்த வண்டி மீது ஸ்ரீதரின் மோட்டார் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் நடிகை வினோதினியின் கணவருக்கு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து அடையாறு போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker