Latestமலேசியா

ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் 3 ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர், மேம்.16- ‘ஐஎஸ்’ தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய  கும்பல் ஒன்று அண்மையில் கைது செய்யப்பட்டத்தை அடுத்து பத்துமலை ஶ்ரீசுப்ரமணியர் ஆலயம், ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் அமைந்துள்ள  ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் ஜாலான் புடுவில் உள்ள கோர்ட்டு மலை கணேசர் ஆலயம் ஆகிய 3 இந்து வழிபாட்டு தலங்களில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் இந்த  மூன்று ஆலயங்களும் நாட்டின் பிரதான இந்து திருதலங்கலாகும். குறிப்பாக பத்துமலை ஆலயத்திற்கு நாளோன்றுக்கு சுமார் 3,000 பேர் வருகை புரிகின்றனர். அண்மையில் கிள்ளான் பள்ளதாக்கு மற்றும் திரெங்கானுவில் காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த மலேசியர் ஒருவர் , இந்தோனிஷியர் ஒருவர் மற்றும் ரொஹினியா இனத்தைச் செர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேல் விவரங்களுக்கு காணொளி செய்தியில் காண்க.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker