Latestமலேசியா

ஷா ஆலம் பகுதியில் நீர் விநியோக தட்டுபாடு ஏற்படலாம் !

ஷா ஆலம்,மே.16- நீர் சுத்திகரிப்பு மையத்தில் பார்க்கும் பணிகள் நடைபெறுவதால் ஷா ஆலம் பகுதிக்கான நீர் விநியோகம் தடைப்படக்கூடும் என சிலங்கூர் மாநில நீர் மேளான்மை நிறுவனம் அறிவித்துள்ளது.

சுங்கை சிலாங்கூர் பகுதி 3 (எஸ்எஸ்3) நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பெரு குழாய்களில் ஒன்று பழுதடைந்து உள்ளது (உபகரணங்கள் செயலிழப்பு). இப்பழுதினால் தினமும் சுத்திகரிக்கப்படும் நீரின் அளவிலிருந்து சுமார் 40 மில்லியன் லிட்டர் குறைவாகியுள்ளது.

ஆயினும் இக்குழாய் பழுதினால் இது வரை எந்தவொறு பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை ஏற்படவில்லை. இருப்பினும் பழுது பார்க்கும் நடவடிக்கை துவங்கப்பட்டவுடன் ஷா ஆலம் வட்டாரத்தில் உள்ள சில பகுதிகளில் நீர் விநியோக தட்டுபாடு ஏற்படலாம் என அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அப்துல் ராவுப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாங்கள் தற்பொழுது இவ்விவகாரத்தை சரி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக இந்த பழுது சம்பவத்தினால் நீர் விநியோகத் தடை ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று வழியில் நீர் விநியோகம் செய்யவும் வழி வகுத்து வருகின்றோம். மக்களை பெருமளவில் பாதிக்காத வண்னம் இப்பிரச்னையை கையாளுகின்றோம் என்றார்.

இதனிடையே இந்த குழாய் பழுது பர்க்கும் நடவடிக்கை குறித்த விவரங்களை பொது மக்கள் www.syabas.com.myஅகப்பக்கத்திலும் “Air Selangor” என்ற விவேக கைபேசி செயல்பாடு வாயிலாகவும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம் எனவும் அப்துல் ராவுப் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker