Latestமலேசியா

ஷா ஆலம் வட்டாரத்தில் மீண்டும் நீர்த் தட்டுப்பாடு! – ஷபாஸ் அறிவிப்பு

ஷா ஆலம்,மே.16- சுங்கை சிலாங்கூர் பகுதி 3 (எஸ்எஸ்3) நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள  குழாய்களில் ஒன்று பழுதடைந்துள்ளதால் ஷா ஆலம் வட்டாரத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணி தொடங்கி நீர் விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவ்வாட்டாரத்தைச் சார்ந்த புக்கிட் கூடா,  ஜாலான் பத்து தீகா லாமா, இந்தெக்மா செக்‌ஷன் 7, செக்‌ஷன் 2 தொடங்கி செக்‌ஷன் 22 வரை (பாடாங் ஜாவா உட்பட), செக்‌ஷன் 23 தொடங்கி செக்‌ஷன் 25 வரை, தாமான் புத்ராமாஸ், யுஐதிஎம் பல்கலைக்கழக வளாகம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோக தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என சிலங்கூர் நீர் நிர்வாக நிறுவனமான ‘ஷபாஸ்’ அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் தொட்டிகள் மூலம் மாற்று முறையில் நீர் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதே நேரம் அப்பகுதி மக்களும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அந்நிறுவனம் தமதறிக்கையில் கேட்டுக் கொண்டது.

இதனிடையே இந்த குழாய் பழுது பார்க்கும் நடவடிக்கை குறித்த விவரங்களை பொது மக்கள் www.syabas.com.myஅகப்பக்கத்திலும் “Air Selangor” என்ற விவேக கைப்பேசி செயல்பாடு வயிலாகவும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker