Latestமலேசியா

அதிருப்தியினால் ஏற்பட்ட சண்டை; வைரலாகும் காணொளி !

ஜொகூர் பாரு, மே. 17 –  இங்குள்ள ஜாலான் துருஸ்யில் அமைந்துள்ள பல் உணவக மையத்தில், கடை ஒன்றின் அமைப்பை மாற்றி அமைத்ததற்காக  இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 13ஆம் தேதி, இரவு 12 மணியளவில், உணவுக் கடையின் விற்பனையாளர் மற்றும் பல் உணவக மையத்தின் ஒப்பந்ததாரருக்கும் இடையே சண்டை மூண்டதாக ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் அதிகாரி ஷாஹுரினான் ஜாஸ் தெரிவித்தார்.

சுமார், 35 நிமிடம் கொண்ட அந்த  காணொளியில், அந்தக் கடை ஒன்றில் அமைப்பை மாற்றி அமைத்ததின் விளைவாக ஏற்பட்ட அதிருப்தியினால், 10 ஆடவர்கள் அந்த உணவு மையத்திற்குள் புகுந்து ரகளை செய்து, அங்குள்ள மேசை நாற்கலிகளை உடைத்து ஆர்பாட்டம் செய்துள்ளனர்.

மேலும், இக்காணொளியின் அடிப்படையில் மேற்கொண்ட தேடலில்,நேற்று அதிகலை 1 மணியளவில்  34 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட 3 ஆடவர்களை, பசார் போரோங் பண்டான் எனும் இடத்தில் கைது செய்ததாக ஷாஹுரினான் ஜாஸ் தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்ட சில நண்பர்களையும் தேடி வருவதாக அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக, பிரிவு 14A, செக்‌ஷன் 427 கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக ஜொகூர் பாரு காவல் நிலையத்தை (07-2182323) என்ற எண்ணிலும் அல்லது போலீஸ் அதிகாரி நூர் முகம்மட் ரொய்சா (019-4782697) என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என ஷாஹுரினான் ஜாஸ் கேட்டுக் கொண்டார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker