Latestமலேசியா

அந்நிய தொழிலாளர் பற்றாகுறை : மைக்கியும் தொடக்கம் முதல் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது !

கோலாலம்பூர், மே.17- இந்தியர்கள் அதிகளவில் ஈடுபடும் வர்த்தகங்களில் ஏற்பட்டுள்ள அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னையை சரி  தொடக்கம் முதல் மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்த்தக சங்கங்களின் சம்மேளனம் தொடக்கம் முதல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அதன் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார்.

இப்பிரச்னைக்கு நல்லதோர் தீர்வு கிடைக்க வேண்டி பிரதமர் அலுவலகம் முன் அமைதி மறியலில் ஈடுபடுவோம் என இந்திய வர்த்தக சங்கங்கள்  விடுத்த எச்சரிக்கை தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்பிரச்னைக்கு பிரதமர் அலுவலகம் முன் அவர்கள் அமைதி மறியலில் ஈடுபடுவது  குறித்த முழு தகவல் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

இருப்பினும் இதற்கு நிரந்திர தீர்வு கிடைக்க மைக்கி இதுவரை பிரதமர் உட்பட பல அமைச்சர்களைச் சந்தித்து பேச்சு வர்த்தை நடத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை விவகாரத்திற்கு நல்லதோர் தீர்வு கிடைக்க மலேசிய இந்திய வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் இறுதி வரை போராடும். மிக விரைவில் இவ்விவகாரம் தொடர்பில் கலந்தாலோசிக்க அனைத்து  இந்திய வர்த்தக சங்கங்களுடன் சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் கோபாலகிருஷ்ணன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker