Latestமலேசியா

இழுக்கைத் தேடித்தரும் போலீஸ்காரர்கள்! -ஐஜிபி சாடினார்

கோலாலம்பூர், மே 17 – போலீஸ் துறைக்கு அவப்பெயரைத் தேடித்தரும் போலீசார் சீருடையும் உலவும் கொள்ளைக்காரர்கள் என்றும் அம்மாதிரியானவர்கள் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் இதுபோன்ற செயலைத் தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தெரிவித்தார்.

இம்மாதத் தொடக்கத்தில்  5 ரோந்துப் போலீஸ்காரர்கள்  ஓர் ஆசிரியரிடமிருந்து 8,000 ரிங்கிட்டை வலுக்கட்டாயமாகப் பறித்த செயலை ‘தி சன்’ பத்திரிகை வெளியிட்டதை அடுத்து அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

போலீஸ்காரர்களின் மீதான பல்வேறு புகார்களைத் தாம் பெற்று இருப்பதாகவும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பணம் பறிக்கப்பட்ட புகார்களும் தமக்குத் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தச் சம்பவத்தில் 50 வயது மதிக்கத்ததக்க ஆசிரியரிடமிருந்து பணத்தைப் பறித்த ஐவரில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

புதன்கிழமை,  ஜாலான் அம்பாங் சாலையில்  ஓர் ஆசிரியர் தமது  பெண் உறவினர் (வயது 27) ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்த போது, அவர்களை இடைமறித்த 5 போலீஸ்காரர்கள்,  ஆசிரியரை வெளியே இழுத்துத் தள்ளி, குத்தி, உதைத்துத் தாக்கிய பின்னர், தங்களிடமிருந்து தப்பிக்க முனைந்ததாகக் குற்றம் சுமத்தி, வழக்கிலிருந்து தப்பிக்க 10,000 ரிங்கிட்டை பிணைப் பணமாகக்  கேட்டுள்ளனர்.

அந்த ஆசிரியர்  8,000 ரிங்கிட்டைத் தருவதற்கு ஒப்புக் கொண்டு,  சில பணப்பட்டுவாடா இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்  அது பற்றி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker