Latestசினிமா

‘எனது குரலில் அதிமுக பிரசாரமா?’ – விஜயசேதுபதி வேதனை

சென்னை, மே. 17- அண்மையில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி போலவே ஒருவர் ஆடியோ ஒன்றில் பேசியது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விஜய் சேதுபதி அதிமுகவுக்கு ஆதரவு தருகிறார் என அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை வறுத்தெடுக்க தொடங்கினர்.p

மேலும் தற்போது அந்த ஆடியோ வாய்ஸ் ஆப் முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களுக்கும் எடுத்துச் சென்ற நிலையில், விஜய் சேதுபதியை போலவே ஒருவரை பல குரல்களில் பேச வைத்து வெளியாகியுள்ள ஒளிநாடா சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த ஆடியோவில் சிலவிஷயங்களில் அச்சு அசலா அப்படியே விஜய் சேதுபதி குரலில் உள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விஜய்சேதுபதி, “எனது குரலை ஏன் பயன்படுத்தினார்கள் தெரியல என்று கூறியுள்ளார்.

“என் ரசிகர்களுக்கும் இத பத்தி என்னிடம்சொன்னாங்க. நான் அந்த தொகுதி மக்களுக்கு சொல்வது ஒன்றுதான். அது என் குரலே அல்ல. மேலும் தேர்தலில் வாக்களிப்பது குறித்து அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு அறிவுரையாக உங்கள் தொகுதி யார் நல்லது செய்வாங்க என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு ஓட்டு போடுங்க. ஆனால் நிச்சயம் ஓட்டு போடுங்க” என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker