Latestமலேசியா

கழிப்பறை இருக்கை- கால் மிதிகளில் இந்து கடவுள் படங்கள்; அமெசோனுக்கு எதிர்ப்பு!

புதுடெல்லி, மே.17-இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் வகையில் பொருட்களை விற்பனை விளம்பரம் செய்த “அமெசோன்” இணையத் தள விற்பனை மையத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இந்து மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்து கடவுள்கள் – இந்து மத முத்திரைகள் படம் வரையப்பட்ட கழிப்பறை இருக்கை கவர்கள், குளியலறை கால் மிதி துணிகள் விற்பனைக்காக அந்நிறுவனத்தின் அகப்பத்தில் அண்மையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளில் வாழும் இந்து மக்கள் இச்செயலை கண்டித்து அப்பொருட்களை விற்பனை செய்ய கூடாது என வலியுறுத்தி சமூக வலைத்தலங்களில் கருத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியவில் இந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் கருத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். நேற்று டுவிட்டர் சமூக வலைத் தள பக்கத்தில் ” #BoycottAmazon” என்ற வாசகத்தை அவர்கள் பிரபலப்படுத்தியுள்ளனர்.

இந்தியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமெசொன் நிறுவனம் பொருட்களை விற்பனை விளம்பரம் செய்வது இது முதல் முறை அல்ல. கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி அந்நிறுவனம் பல முறை இது போன்ற செயல்களை செய்துள்ளது என்றும் மக்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, உலகளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அமெசோன் நிருவனம் அப்பொருட்களை விற்பனையில் இருந்து மீட்டுக் கொள்ளவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்நிறுவனத்தை சார்ந்த விற்பனையாளர்கள் தங்களின் விற்பனை வழிகாட்டுதலையும் வரம்புகளையும் பின் பற்ற வேண்டும் என அதன் நிர்வாகத்தினர் வலியுறுத்தி அறிக்கை வெளிவிட்டதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker