Latestமலேசியா

கேடிஎம்மின் சேவை அட்டவணை: புதிய கைப்பேசி செயலி அறிமுகம்!

கோலாலம்பூர், மே 17 – கேடிஎம் “மை ரயில் டைம்” என்ற புதிய ரயில் அட்டவணையை  அறிமுகம் செய்கிறது.  இந்தக் கைப்பேசி செயலியைக் கொண்டு தற்போது உள்ள பயணிகளின் ரயில் சேவையின் மீதுள்ள எதிர்மறையான கருத்தைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக  போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மேலும், கிள்ளான் ரயில் தண்டவாள கட்டுமானப்  பணியினால் கடந்த சில வருடங்களாக ரயில் தாமதமாகி வந்துள்ளது. பயணிகள் இனி ரயில் சேவையை அதிகமாகப் பயன்படுத்துவர் என எதிர்பார்ப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.

தொடக்கத்தில் ரயில் ஒவ்வொரு  20 நிமிடங்களுக்கு ஒன்று எனும் சேவையில்  இருந்து வந்துள்ளது.  தற்போதுள்ள ரயில் தண்டவாள கட்டுமானத்தால் 45 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவையாக தாமதம் கண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த மை ரயில் டைம் செயலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் பயணிகள் ரயில் நேரம், ரயில் தாமதம் மற்றும் ரயில் சேவையின் மற்ற தகவல்களையும் அறிந்து பயணர்கள் தங்களின் பயணத்தைச் சரியான முறையில் செலவிடாலாம் என அந்தோணி  கூறினார்.

இந்த மை ரைல் டைமின் செயலியைக் கொண்டு பயணிகள் கிள்ளான் – தங்சோங் மாலிம் மற்றும் சுங்கை காடுட் – பத்து கேவ்ஸ், ஸ்தாப்பாக்  ரயில் சேவை பற்றிய தகவல்களைப் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும், கேடி எம்  கொம்பயூட்டர் உத்தாரா (KTM Komuter Utara, ஈடிஎஸ் (ETS), மற்றும் இண்டர்சிட்டி (Intercity)  எனப்படும் இதர ரயில் சேவையில் திட்டத்திற்கான செயலி செப்டம்பர் மாதத்தில் அமலாக்கம் செய்யப்படும் என  அந்தோணி தெரிவித்தார்.

தற்போது, மை ரயில்டைம் செயலியை கூகல் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் மிக விரைவில் iOS App store-லிருந்து பதவிறக்கம் செய்யலாம் எனவும் அவர் கூறினார்.

எல்ஆர் டி, மோனோரயில் மற்றும் ரேப்பிட் பேருந்து இது போன்ற மற்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கு இது போன்ற தனி செயலிகளைக் கொண்டு செயல் படும்.  மேலும், அதே போன்று கேடிஎம் சேவையை உருமாற்ற வேண்டும் என அந்தோணி லோக் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker