Latestமலேசியா

தாபோங் ஹராப்பான் நிதி முழுவதும் 1எம்டிபி கடனுக்கு தரப்படும்! -லிம்

கோலாலம்பூர், மே. 17- தாபோங் ஹராப்பான் நிதிக்காக திரட்டப்பட்ட பணம் முழுவதும் 2019 ஆம் ஆண்டிற்கான 1எம்டிபி கடனில் ஒரு பகுதியை  அடைக்கப் பயன்படுத்தப்படும்  என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

தாபோங் ஹராப்பான் நிதிக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார். தாபோங் ஹராப்பான் நிதி 203.29 மில்லியன் ரிங்கிட் ஆக இருந்து வருகிறது 2019 ஆம் ஆண்டுக்கான 1எம்டிபி கடன் 170 கோடி ரிங்கிட் ஆகும் என்றார் அவர்.

மக்களிடம் திரட்டப்பட்ட நிதி ஒட்டுமொத்தமாக 1எம்டிபி கடன் தொகையாக விளங்கும் 5100 கோடி ரிங்கிட்டை அடைப்பதற்கு போதுமானது அல்ல. எனினும் மக்கள் தங்களின் தேசப் பற்றையும் விசுவாசத்தையும் காட்டும் நோக்கில் இந்த நிதிக்கு பணம் கொடுத்தனர் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நாட்டின் கடனை அடைப்பதற்கு தங்களால் இயன்றதைச் செய்ய முன்வந்த அவர்களின் தேசப்பற்றை இது தெளிவு படுத்தியுள்ளது என்று லிம் குவான் எங் சொன்னார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker