Latestமலேசியா

நஜிப்பின் புதல்வர் – இந்தோ. அரசியல்வாதியை மணக்கிறார்

கோலாலம்பூர், மே 17 – முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின்  முந்தைய திருமணத்தில் பிறந்த புதல்வர்  நஸிபுடின் நஜிப் இந்தோனேசியாவில் பார்ட்டி கோல்கார் கட்சியின் இளம் அரசியல்வாதியான பித்ரி அப்ரினாசாரி உத்தமியை மணக்கவிருக்கிறார்.

அவர்களின் நிச்சயதார்த்தம் மே 4ஆம் தேதி ஜக்கார்த்தா ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது. அவர்களின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற திட்டமிடப் பட்டுள்ளது.

பித்ரி இந்தோனேசியாவின் பிரபல வர்த்தகரான டோம்மி சுமர்டியின் புதல்வியாவார். நஜிப் ரசாக்கிற்கும் தெங்கு புத்ரி ஸைனா தெங்கு இஸ்கண்டாருக்கும் பிறந்த 3 பிள்ளைகளில் நஸிபுடின் (வயது 32) ஒருவராவார்.

தெங்கு புத்ரி ஸைனாவோடு நஜிப்பின் பெயரும் அழைப்புக் கார்டுகளில் இடம் பெற்றிருந்தன. நஜிப்புக்கும்  ரோஸ்மா  மன்சோருக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ளவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker