Latestமலேசியா

பிடிபிடிஎன் கடன்: பயணத் தடையா? அது ஆலோசனை மட்டுமே! -மஸ்லீ

ஜோர்ஜ் டவுன்,மே.17-  பிடிபிடிஎன்  உயர்க் கல்வி கடனை செலுத்த தவறியவர்களுக்கு எதிராக பயணத் தடையை மீண்டும் அறிமுகப்படுத்துவது என்பது பொது ஆலோசனை செயல்முறையில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளில் ஒன்றாகும் என கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெளிவுப்படுத்தினார்.

இன்று சுங்கை ஆரா ஆரம்ப தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த அவர், செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த பயண தடையை குறுகிய காலத்தில் அமல்ப்படுத்த போவதாக பிடிபிடிஎன் குழுமம் அறிவிக்கவில்லை. அவர்கள் தாம்சார்ந்த பல விவகாரங்களுக்கு பொது மக்களின் கருத்துக்களை பெறுவதற்கு இந்த பொது ஆலோசனை செயல்முறையை முன்வைத்துள்ளனர். அதில் அந்த ஆலோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இது அவர்களின் உறுதியான திட்டம் கிடையாது. இது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பிடிபிடிஎன் குழுமத் தலைவர் வான் சைபுல் வழங்கிய பதில் இந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே இது போல் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளமடாமல் இருக்க பிடிபிடிஎன் குழுமம் தெளிவான விளக்கத்தை ஊடகத்திற்கு வழங்க வேண்டும் என  டாக்டர் மஸ்லீ மாலிக் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக இந்த உயர்க் கல்வி கடனை செலுத்த தவறியவர்களுக்கு எதிராக பயணத் தடையை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டன. இது தொடர்பில் பயணத் தடையை அறிமுகப்படுத்துவதற்கு முன் கடனை செலுத்த அவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker