Latestமலேசியா

பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். இட்ரிஸ் காலமானார்!

ஜார்ஜ் டவுன், மே. 17- மலேசியாவின் முன்னோடி பயனீட்டாளர் இயக்கத்தின் தலைவரான மாமனிதர் எஸ். எம். முகம்மட் இட்ரிஸ் இன்று பிற்பகல் 4.45 மணியளவில் காலமானார். 93 வயதை எட்டிவிட்ட விட்ட அவர், இருதயப் பிரச்சனை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை பினாங்கிலுள்ள உள்ள கிளேனிக்கல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவர் பயனீட்டாளர் சங்கத்தின் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வந்தார். மலேசிய பயனீட்டாளர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு மையமாக எஸ்.எம். முகம்மட் இட்ரிஸ் தலைமையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் செயல்பட்டு வந்தது என்பதே நாடறிந்த ஒன்றாகும்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை அமைத்த ஸ்தாபக உறுப்பினர்களின் எஸ்.எம். முகம்மட் இட்ரிஸ் ஒருவராவார். 1975 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் துறை ஒன்று அரசாங்கத்தின் உருவாவதற்கு மிக முக்கியமான காரண கர்த்தாவாக விளங்கியவர்களில் இவரும் ஒருவர்.

நச்சு இரசாயனத்திற்கு எதிரான தடைகள், குறிப்பாக பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு எதிரான தடைகள், உணவுப் பொருட்களின் மீது அதன் காலாவதியாகும் தேதியை பதிவிடுதல், சிகரெட் விளம்பரங்களைத் தடை செய்தல் மற்றும் சொக்சோ எனப்படும் தொழிலாளர்களுக்கான சமூக நல பாதுகாப்பு திட்ட சந்தா அதிகரிப்பு, தொழிலாளர் சேம நிதி சந்தா அதிகரிப்பு போன்ற பல்வேறு போராட்டங்களில் முன்னணி வகித்தவர் எஸ்.எம். முகம்மட் இட்ரிஸ்.

கடைசி மூச்சு வரையில் மலேசிய பயனீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்க இடைவிடாமல் போராடிய எஸ்.எம். முகம்மட் இட்ரிஸ், பயனீட்டாளர்களின் நலன்களுக்காக போராடக்கூடிய வகையில் பல இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கியவர் ஆவார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker