Latestமலேசியா

அன்னிய தொழிலாளர் சேர்ப்பு: முடக்கப் படவில்லை! -அமைச்சு

கோலாலம்பூர், மே.18- நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அமையாததால் அந்நிய தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன என்றாலும் அன்னியத் தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பது முடக்கி வைக்கப்படவில்லை என்று மனித வளத்துறை அமைச்சு விளக்கம் அளித்திருக்கிறது.

நாட்டின் தொழிலாளர் சட்டங்களுக்கு ஏற்ப முதலாளிகள் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் முறை உருவாகி விடக் கூடாது என்பதை தடுக்கும் நோக்கிலும் அமைச்சு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கை கூறியது.

தீபகற்ப மலேசியாவின் மனிதவளத் துறையின் ePPAx சிஸ்டம் மூலம் அன்னியத் தொழிலாளர்களை உணவகங்களுக்கு வேலைக்கு சேர்க்க 4 ஆயிரத்து 434 முதலாளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவற்றில் 1,407 விண்ணப்பங்கள், அதாவது 8 ஆயிரத்து 552 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன என்று மனிதவள அமைச்சு அறிக்கை தெரிவித்தது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் வரையில் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கிட்டத்தட்ட 796 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 216 விண்ணப்பங்கள் அதாவது 1,840 அந்நிய தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 580 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப முதலாளிகளின் இந்த விண்ணப்பங்கள் அமையவில்லை என்பதால் அவை நிராகரிக்கப்பட்டன என்று அமைச்சு கூறியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker