Latestஉலகம்

அமெரிக்க குடிநுழைவுக் கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு சாதகநிலை!

வாஷிங்டன், மே. 18 – அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில், அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார். வெளிநாட்டினருக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையில் இனி அதிக அளவில் நிரந்தர குடியுரிமை விசா வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் பலர் நிரந்தர குடி உரிமைக்கான விசா பெறுவதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேருக்கு மட்டுமே கிரீன் கார்டு என்ற நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலும் அங்கு ஏற்கனவே நிரந்தர குடியுரிமை பெற்று வசிப்போரின் குடும்பத்தினருக்கே வழங்கப்படுகின்றன. தகுதியின் அடிப்படையில் 12% விசாக்கள் மட்டுமே வழங்கப் படுகின்றன. இந்நிலையில் இதில் அதிரடி மாற்றங்கள் செய்து புதிய குடியேற்ற கொள்கையை அமெரிக்க அதிபர் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: தற்போது பின்பற்றப்படும் குடியேற்றக் கொள்கை வெளிநாடுகளில் திறமையான பணியாளர்களை நம் நாட்டுக்கு வரவழைப்பதில் தோல்வியடைந்துவிட்டது. இது திறமைசாலிகளுக்கு பாரபட்சம் காட்டுவதாக உள்ளது .எனவே இதில் மாற்றங்களைச் செய்ய வேண்டியது வேண்டி உள்ளது.

எனவே வெளிநாட்டினருக்கு தகுதி,திறமை, வயது, வேலைவாய்ப்பு, ஆங்கிலப்புலமை, பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகள் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் நிரந்தர குடியுரிமை அனுமதி வழங்கப்படும்.

திறமையான மாணவர்கள் மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போது திறமை மட்டும் தகுதியின் அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது.

இது 57 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார். புதிய குடியேற்ற கொள்கை அமலுக்கு வந்தால் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். இதற்கிடையே புதிய குடியேற்ற கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker