Latestஉலகம்

அமெரிக்க படையை நோக்கி நகரும் ஈரான் போர்க் கப்பல்களால் பதற்றம்!

பாக்தாத்,மே.18- அமெரிக்க கடற்படை நோக்கி ஈரான் நாட்டுப் போர் விமானங்கள் மற்றும் சிறிய ரக போர்க் கப்பல்கள் முன்னேறிச் செல்வது, அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

முன்னதாக அமெரிக்க உள்ளிட்ட வல்லரசுகளுடன் நடந்த 2015 ஆம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. இதனால் அமெரிக்காவுக்கு பயனில்லை என்று கருத்து தெரிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இது அமெரிக்கா ஈரான் நிலையை உறவில் மனக் கசப்பை ஏற்படுத்தியது. மேலும் ஈரான் தனது கருப்பு பட்டியலில் அமெரிக்கா இணைத்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்தது. ஈரானை தமது வழியில் கொண்டு வர அமெரிக்கா போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஏவுகணைகள் ஈரான் நாட்டை நோக்கி நகர்த்தியது.

இந்நிலையில் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஈரான் நாட்டு ராணுவம் சிறிய ரக போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் அமெரிக்காவை நோக்கி நகர்த்தி வருகிறது. இதனிடையே ஈரானுடன் போர் புரியும் சூழல் உருவாகாது என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பான தளவாடங்களை அனுப்பியதாக அமெரிக்கா கூறியதை ஈரான் நிராகரித்தது. இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் காரணமாக பாக்தாத் மற்றும் எர்பில் நகர தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker