Latestமலேசியா

சட்டவிரோத பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் அதிகரிப்பு!

புக்கிட் மெர்தாஜாம், மே 18 –  செப்பராங் பிறை வட்டாரத்தில் உரிமம் பெற்ற மறுசுழர்ச்சி தொழிற்சாலைகளை விட சட்ட விரோதத் தொழிற்சாலைகள் பெருகி வருவதாகத் தெரிகிறது.
அவை 400க்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுவதாக பினாங்கு நல, சமூக பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ தெரிவித்தார்.

பெரும்பாலும் புக்கிட் தெங்கா வட்டாரத்தில்தான் அவை அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மற்ற மாநிலகள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவை போர்ட் கிள்ளான் மற்றும் பினாங்கில் இருக்கும் துறைமுகங்களின்  வழியாக  இறக்குமதி செய்யப்படுகின்றன.
கடந்தாண்டு ஜனவரியிலிருந்து ஜூலை வரை 48.3 மில்லியன் பெறுமான 754,000 டன் பிளாஸ்டிக் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

பினாங்கில் புக்கிட் மெர்தாஜாமில் 59, நிபோங் தெபாலில் 34, தாசேக் குளுகோரில் 25, பாகானின் 23, கெப்பாலா பாத்தாஸில்  13 மற்றும் பெர்மாத்தாங் பாவில் 11 மறு சுழர்ச்சி தொழிற் சாலைகள் செயல்படுகின்றன.

எனவே இந்தத் தொழிற்சாலைகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் செயல்பட நிபோங் தெபாலில் இருக்கும் பூலாவ் பூரோங்கில் மையம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker