Latestமலேசியா

பக்காத்தான் எம்.பி. பாலியல் தொல்லை: -பெண் வழக்கறிஞர் புகார்

கோலாலம்பூர், மே.17- பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது பிகேர் கட்சி தொகுதி முன்னாள் பொருளாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியிருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது.

பேரா மாநிலத்தில் உள்ள தொகுதி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்து வரும் அந்த நபர் தனக்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் பாலியல் தொல்லை வழங்கியதாக திருமணமான அம்மாது நேற்று காவல் துறையில் புகார் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

நடந்து முடிந்த 14-ஆவது பொதுத் தேர்தல் சமயத்தில் அந்த நபருக்கு துணையாக வழக்கறிஞராக பணி புரியும் அம்மாது தேர்தல் பணியாற்ற துவங்கியிருக்கிறார்.

இச்சமயத்தில் அந்த நபர் தன்னை அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்து பேசியுள்ளார்.
வீடியோ அழைப்பு செய்யவும் முற்பட்டுள்ளார்.
குறிப்பாக “ லவ் யு” , “சயாங்” போன்ற வார்த்தைகளையும் சொல்ல செய்துள்ளார்.

பின் ஒரு படி மேலே சென்று தகாத புகைப்படங்களை தொலைப்பேசி மூலம் அனுப்ப தொடங்கினார்.

அவரின் செயல் எனக்கு பயத்தையும் மன உளைச்சளையும் அதிகம் தந்ததால் இவ்விவகாரத்தை நான் என் கணவரிடம் தெரிவித்தேன்.

விஷயம் அறிந்த அந்த நாடாளுமன்ற உறுப்பினர் எங்களிடம் நேரடியாக வந்து மன்னிப்பு கோரினார். நாங்களும் அவ்விவகாரத்தை விட்டு விட்டோம்.

ஆனால் அதன் பின் தற்பொழுது மீண்டும் அவர் எனக்கு பழையபடி தொல்லை தர தொடங்கியுள்ளார் என்று தகவல் உள்ள புகார் கடிதம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இவ்விவகாரம் தொடர்பில் காவல் துறை எந்தவொறு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker