Latestமலேசியா

நீரில் இராசயனக் கலவை – சோதனையிட பேரா அரசுக்கு கோரிக்கை!

கோலாலம்பூர், மே.18 – கிரிக் மற்றும் கோலக் கங்சார் பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத நீரில இரசாயன மாசு இருப்பதை சோதனையிட வேண்டுமென பேரா மாநில அரசை ‘ஸ்பான்’ எனப்படும் தேசிய நீர்ச் சேவை கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய நீர்ச்  சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ, பேரா நீர் வாரியம் 11.5 கிலோ மீட்டருக்கு புதிய நீர் குழாய்களைப் பதித்து லாவின் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆயர் கண்டாவுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை 10 லட்சத்து 32 ஆயிரம் ரிங்கிட் செலவில் நிர்மாணித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கிரிக்கில் விநியோகிக்கப்படும் நீரில்  இரசாயனக் கலவை கலக்கப்பட்டிருக்கும் புகார்  இன்னும் தீர்க்கப்படவில்லை என சார்லஸ் குறிப்பிட்டார்.

எனவே, சுங்கை ரூய் ஆற்றிலிருந்து பெறப்படும் நீரில் இரசாயனம் கலக்காமல் இருப்பதை பேரா அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கக்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆயர் கண்டா நீர் சுத்திகரிப்பு ஆலை நாளொன்றுக்கு 68,000 மில்லியன் லிட்டர் நீரை விநியோகிக்க ஆற்றல் கொண்டிருப்பதாகவும்  கம்போங் ஆயர் கண்டாவின்  312 குடியிருப்பாளர்களுக்கு சுத்திகரிக்கபட்ட நீரை  தற்போது விநியோகித்து வருவதாகவும் ஸ்பான் குறிப்பிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker